அனுபம் கெர் படத்துடன் கள்ள நோட்டு அச்சடித்த மர்மம் actor Anupam Kher fake currency notes Counterf
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தைச் சேர்ந்தவர் மெஹுல் தக்கர். பிரபல நகை வியாபாரி. இவரது கடைக்கு கடந்த 24 ம்தேதி இருவர் வந்தனர். 2100 கிராம் தங்கம் வாங்கினர். மொத்த அமவுண்ட் 1.6 கோடி ரூபாய் என நகைக்கடை ஊழியர்கள் பில் போட்டு கொடுத்தனர். நகை வாங்க வந்தவர்கள், ஒரு பையை ஊழியர்களிடம் கொடுத்தனர். அதை வாங்கிய ஊழியர்கள் உள்ளே 500 ரூபாய் நோட்டு கட்டுகள் இருப்பதை பார்த்தனர். பைக்குள் கையை விட்டு நோட்டு கட்டுகளை எடுப்பதற்குள் அதுல 1.3 கோடி ரூபாய்தான் இருக்கிறது. மீதி 30 லட்சம் பணத்தை நாளைக்கு கொடுக்கிறோம் என நகை வாங்கிய இருவரும் கூறினர். அதை நம்பிய ஊழியர்கள் நகைகளை கொடுத்தனர். நகைகளை வாங்கிக் கொண்ட இருவரும் கிளம்பிச் சென்றனர். அவர்கள் போன பிறகு பணக்கட்டுகளை எடுத்து மேஜையில் போட்டு எண்ண துவங்கினர். அப்போதுதான், 500 ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துக்கு பதில் நடிகர் அனுபர் கெர் படம் இருப்பதை ஊழியர்கள் பார்த்தனர். நம் கண்ணுக்குத்தான் அனுபம் கெர் தெரிகிறார் என நினைத்து கண்ணை கசக்கிக்கொண்டு திரும்பவும் பார்த்தனர். அப்பவும் அனுபம் கெர் படம்தான் தெரிந்தது.