உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கணேஷ் மறைவு பேரிழப்பு; முதல்வர் ஸ்டாலின் இரங்கல் actor delhi ganesh| cm stalin|

கணேஷ் மறைவு பேரிழப்பு; முதல்வர் ஸ்டாலின் இரங்கல் actor delhi ganesh| cm stalin|

நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது இரங்கல் செய்தி: மூத்த திரைக்கலைஞர் டெல்லி கணேஷ் மறைந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாக பதித்தவர். 400க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் மக்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். வெள்ளித்திரை மட்டுமல்ல சின்னத்திரை தொடர்களிலும் நடித்து முத்திரை பதித்தார். கலைஞர் எழுத்தில் உருவான இளைஞன் படத்திலும் நடித்திருந்தார்.

நவ 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி