முகேஷிடம் 3 மணிநேரம் நடந்த விசாரணை actor mukesh| kerala actor|
மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் குற்றங்கள் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியை கேரள அரசு அமைந்தது. அந்த கமிட்டியின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்தியது. அதை தெடர்ந்து, நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி வெளிப்படையாக பேசத்தொடங்கினர். ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கொல்லம் தொகுதி எம்எல்ஏவும், நடிகருமான முகேஷ் மீதும் நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். பல ஆண்டுகளுக்கு தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை கொடுத்த புகாரையடுத்து முகேஷ் மீது கொச்சி நகரில் உள்ள மரடு போலீசார் கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தனர். முகேஷ் தலைமறைவானதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டார். முன்னதாக, பாலியல் புகார் தொடர்பாக அவரிடம் 3 மணிநேரத்திற்கு மேலாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. ஆனால், விசாரணைக்கு நடிகர் முகேஷ் முழுமையாக ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது.