பாபா சித்திக்கை விட சல்மான் நிலை மோசமாகும் | Actor Salman Khan | Lawrence bishnoi mumbai police
சல்மான் உயிருடன் இருக்க ₹ 5 கோடி கேட்டு மிரட்டல் கடந்த 1998ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் படப்பிடிப்பில் பங்கேற்றபோது அரிய வகை மானை வேட்டையாடியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட சல்மான் கான் பின்னர் விடுவிக்கப்பட்டார். சல்மான்கான் வேட்டையாடிய அரிய வகை மானை பிஷ்னோய் இன மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இதனால் சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் அவரை கொலை செய்வோம் என மாஃபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் மிரட்டல் விடுத்து இருந்தான். இதற்கிடையே கடந்த ஏப்ரல் 14ம் தேதி அதிகாலை சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சல்மான் கானை கொலை செய்ய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ரூ.25 லட்சம் பேரம் பேசியதாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் ரூ.5 கோடி தர வேண்டும் மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மிரட்டல் மெசேஜ் வந்துள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வந்து சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் ரூ.5 கோடி கொடுக்க வேண்டும்.