உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் கட்சி கொடி; நடவடிக்கை எடுக்க பிஎஸ்பி மனு | Actor Viaji | Vijai Party | TVK | BSP

விஜய் கட்சி கொடி; நடவடிக்கை எடுக்க பிஎஸ்பி மனு | Actor Viaji | Vijai Party | TVK | BSP

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கி அதற்கான கொடி மற்றும் பாடலை ஆகஸ்டு 22ல் அறிமுகப்படுத்தினார். கொடி சிவப்பு, மஞ்சள் நிறங்களில் இரட்டை போர் யானைகளும், நடுவே வாகை மலரும் இடம் பெற்றிருந்தது. கட்சியின் முதல் மாநில மாநாட்டின் போது இதற்கான விரிவான விளக்கத்தை அளிப்பதாக விஜய் கூறினார். அவர் கட்சி கொடி, அறிமுகப்படுத்திய நாள் முதலே பல கட்ட விமர்சனங்களை சந்தித்தது. போர் யானைகளாக இருக்கும் யானைகள் இந்தியாவை சேர்ந்தவை அல்ல, ஆப்ரிக்காவை சேர்ந்தவை. யானைகள் கேரள அரசின் போக்குவரத்து கழகம், சில தனியார் நிறுவனங்கள் போன்றவற்றின் லோகோ போல் உள்ளது. கொடியின் வண்ணங்கள் ஸ்பெயின் நாட்டு கொடி போல உள்ளது. எங்கள் கொடியில் உள்ள வண்ணங்கள் போல உள்ளது என வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் விமர்சனம்.

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ