/ தினமலர் டிவி
/ பொது
/ ஜல்லிக்கட்டை கண்டு ரசித்த நடிகர் விக்ரம், துஷாரா விஜயன் | Actor Vikram | Jallikattu |Dindigul
ஜல்லிக்கட்டை கண்டு ரசித்த நடிகர் விக்ரம், துஷாரா விஜயன் | Actor Vikram | Jallikattu |Dindigul
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாணார்பட்டி அருகே நத்தமாடிபட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடக்கிறது. காலை முதல் காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது. யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் விக்ரம், நடிகை துஷாரா விஜயன் இருவரும் ஜல்லிக்கட்டை பார்க்க மைதானம் வந்தனர். இவர்கள் இருவரும் நடித்த வீர தீர சூரன் படம் இப்போது தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. பட பிரமோஷனுக்காக திண்டுக்கல் சென்றிருந்த விக்ரம், கதாநாயகி துஷாரா விஜயன் சொந்த ஊரான சாணர்பட்டி அருகே ஜல்லிக்கட்டு நடப்பதை கேள்விப்பட்டு வந்திருந்தார்.
மார் 30, 2025