/ தினமலர் டிவி
/ பொது
/ நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஜூலை 7 வரை நீதிமன்ற காவல்! | Actor Srikanth arrest | Drug Case
நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஜூலை 7 வரை நீதிமன்ற காவல்! | Actor Srikanth arrest | Drug Case
ஸ்ரீகாந்த் சிக்கிய பின்னணி! லிஸ்டு இன்னும் முடியல துப்பு துலக்கும் போலீஸ் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சொகுசு பாரில் சென்ற மாதம் 22ம் தேதி ஓய்வுபெற்ற டிஎஸ்பி மகன் செல்வபாரதி தரப்பினரும், மயிலாப்பூரை சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத் தரப்பினரும் மோதிக் கொண்டனர். பிரசாத்துடன் வந்திருந்த தொழில் அதிபர்களான, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ்குமார், போரூரைச் சேர்ந்த தனசேகர், திமுக பிரமுகரான துாண்டில் ராஜா பீர் பாட்டிலை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். பின் சம்பவ இடத்திற்கு சென்ற அதிமுக பிரமுகரான அஜய் ரோகன், முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த ரவுடி நாகேந்திர சேதுபதி ஆகியோர் அந்த மதுக்கூடத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
ஜூன் 24, 2025