வாய்க்கு வந்தபடி திட்டியவரை வாய் நிறைய சகோதரர் என அழைத்த விஜய் | Actor Vijay | TVK | Seeman | NTK |
தமிழக அரசியலில் இப்போது ‛டாக் ஆப் தி டவுன் ஆக இருப்பவர் நடிகர் விஜய் தான். இதற்கு காரணம் கடந்த மாதம் விழுப்புரம் விக்கிரவாண்டியில் அவர் நடத்தி முடித்த முதல் அரசியல் மாநாடு தான். லட்சக்கணக்கில் தொண்டர்கள் குவிந்த மாநாட்டில் விஜய் தனது கொடியின் விளக்கம், கொள்கைகளை தெளிவுப்படுத்தினார். பிளவுவாத அரசியல் செய்யும் பாஜ கொள்கை எதிரி எனவும், ஊழல் கபடதாரிகளான திமுக தனது அரசியல் எதிரி என்றும் மேடையில் அறிவித்தார். அதேபோல் திராவிடமும், தமிழ் தேசியமும் இருகண்கள் என்று பேசிய விஜய், கூட்டணிக்கு வந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்றும் பேசி தமிழக அரசியலில் அதிரடி கிளப்பினார். விஜய் பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் தேசியமும், திராவிடமும் இருகண்கள் என்று கூறிய விஜயை சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக கடந்த 1ம் தேதி சென்னையில் நடந்த தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் விஜயை தம்பி எனக்கூறி மறைமுகமாக கடுமையாக தாக்கி பேசினார். திராவிடமும், தமிழ் தேசியமும் எப்படி ஒன்றாக முடியும். இது கொள்கை இல்லை. கூமுட்டை. அதுவும் அழுகின கூமுட்டை. வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ..