உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொய் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றும் எண்ணம் இனி நடக்காது tvk| actor vijay| neet| mk stalin| dmk

பொய் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றும் எண்ணம் இனி நடக்காது tvk| actor vijay| neet| mk stalin| dmk

நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில், ஓட்டு போட்ட மக்களை திமுக அரசு ஏமாற்றி விட்டதாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கூறியிருக்கிறார். 2021 தேர்தல் பிரசாரத்தின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம்; அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று நம்ப வைத்தார்கள். இப்போது, நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்குதான் இருக்கிறது எனக்கூறி ஏமாற்றுகிறார்கள். அத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே என்ற பாடல் இப்போதைய ஆட்சியாளர்களுக்கு பொருத்தமாக இருக்கிறது. தேர்தலில் போலி வாக்குறுதிகள் கொடுத்து மக்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டும். ஆட்சிக்கு வந்த பின் மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது அவர்களின் எண்ணம்.

ஜன 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ