வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பில்லை! நடிகை கண்ணீர் | Actress Video | Tanushree Dutta |
நடிகர் விஷாலுக்கு ஜோடியாக தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. பின் இந்தி திரைப்பட வாய்ப்புகள் குவிந்ததால் அங்கேயே செட்டில் ஆனார். ஆஷிக் பனாயா அப்னே, ரிஸ்க், ஸ்பீட், அபார்ட்மென்ட் போன்ற இந்தி படங்களில் நடித்த அவர் 2013ல் இருந்து சினிமாவிலிருந்து விலகி இருக்கிறார். 2018ல் #MeToo பிரச்னை வெடித்தபோது படப்பிடிப்பு தளத்தில் பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்தார். இந்த சூழலில் இன்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் அழுதுகொண்டே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தனது வீட்டில் தான் சித்திரவதை செய்யப்படுவதாக கூறுகிறார். வீட்டில் உள்ளவர்கள் வேண்டுமென்றே தெரியாதவர்களை வேலைக்கு அமர்த்தியதாகவும், அவர்கள் திருட்டு செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறினார். யார் அந்த நபர்கள் என நடிகை வெளிப்படையாக சொல்லவில்லை. இன்னொரு வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் பின்னணியில் சில சத்தங்கள் கேட்கின்றன. அதை சுட்டிக்காட்டி பேசிய தனுஸ்ரீ, என் வீட்டில் அடிக்கடி இப்படி சத்தங்கள் கேட்கின்றன. நான் குடியிருக்கும் மேனேஜ்மென்டுக்கும் புகாரளித்தேன். ஆனால் எந்தப் பலனும் இல்லை. தொடர் துன்புறுத்தல்களால் சோர்வடைந்துவிட்டேன். தயவுசெய்து யாராவது எனக்கு உதவுங்கள்! தாமதமாகும் முன் எதாவது செய்யுங்கள் என தனுஸ்ரீ கோரிக்கை வைத்து உள்ளார்.