ஃபெப்சி தொழிலாளர்கள் - நடிகை சோனா மோதல் Actress Sona Protest|FEFSIoffice|Dharna
2001ல் அஜித் நடிப்பில் வெளிவந்த பூவெல்லாம் உன் வாசம் படம் மூலம் நடிகையானவர் சோனா ஹெய்டன். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். நடிகை சோனா தனது வாழ்க்கை வரலாறை ஸ்மோக் என்ற தலைப்பில் வெப் தொடராக எடுத்து வருகிறார். படப்பிடிப்புகளின்போது சோனாவுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு வந்தன. ஒரு கட்டத்தில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் நடிகை சோனா பெப்சி தொழிலாளர் யூனியனில் புகார் அளித்தார். இந்த நிலையில் இன்று அவர் சென்னை வடபழனியில் உள்ள பெப்சி தொழிலாளர் யூனியன் அலுவலகம் வந்து தர்ணாவில் ஈடுபட்டார். தனது வெப் தொடரின் படப்பிடிப்புகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கை தராமல் சங்கர் என்பவர் இழுத்தடிக்கின்றனர். நியாயம் கிடைக்கும்வரை தினமும் பெப்சி யூனியன் அலுவலகம் வந்து தர்ணா செய்வேன் என்றும் நடிகை சோனா தெரிவித்தார்.