ஜோ பைடனுக்கு எதிராக திரும்பும் அதானி வழக்கு Adani bribery case US court US Lawmakers letter to Atto
தொழிலதிபர் கவுதம் அதானியின் அதானி குரூப் நிறுவனம் தயாரிக்கும் சூரிய ஒளி மின்சாரத்தை விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் முக்கிய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2 00 கோடி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்த விவரங்களை மறைத்து அமெரிக்க வங்கிகளிடம் இருந்தும் அமெரிக்கர்களிடம் இருந்தும் பல ஆயிரம் கோடி முதலீடுகளை அதானி குழுமம் பெற்றுள்ளது; இது அமெரிக்க சட்டப்படி குற்றம் என கூறி நியூயார்க் கோர்ட்டில் அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக, நியூயார்க் கோர்ட் அதானிக்கு சம்மன் அனுப்பியது இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பார்லிமென்ட் செயல்பாடுகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் முடக்கின. அமெரிக்க நீதித்துறை முன்வைத்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது என, தொழிலதிபர் அதானி கூறினார். இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்போம் எனவும் அவர் கூறியிருந்தார். இந்திய அரசியல் மட்டுமின்றி அமெரிக்க அரசியலிலும் இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. பைடன் அதிபராக இருந்த காலக் கட்டத்தில்தான் அதானிக்கு எதிராக நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.