திமுக கொடியுடன் வந்த கார்! உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஆதவ் புகார் | Adhav Arjuna | TVK |
தி.நகர் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் தவெக கட்சி தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஆதவ் அர்ஜூனா தரப்பில் அவரது வக்கீல் கொடுத்த புகாரில் கூறப்பட்டு உள்ளதாவது; சென்ற 10ம் தேதி காலை 11 மணி அளவில் ஆதவ் அர்ஜுனா அலுவலகம் அமைந்துள்ள ஆழ்வார்பேட்டை பகுதியில் ஆட்டோவில் சில மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வந்து நோட்டமிட்டு உள்ளனர். ஆபிஸ் கேட் அருகே நின்ற அவர்களிடம் கேள்வி எழுப்பிய போது அங்கிருந்து கிளம்பினர். பின் மீண்டும் மதியம் 1 மணி, 3 மணி அளவில் அதே ஆட்டோ மீண்டும் சுற்றி திரிந்தது. 1 மணி அளவில் திமுக கொடி கட்டிய இன்னோவா கார் ஒன்று எந்த தொடர்பும் இல்லாமல் ஆதவ் ஆபீஸ் அருகே வந்து சென்றுள்ளது. 3 மணி அளவில் ஆட்டோ வந்த போது 7,8 நபர்கள் நோட்டமிட்டு சென்றுள்ளனர். இது அனைத்தையும் வைத்து பார்க்கும் போது திட்டமிட்டு அவர்கள் வந்ததற்க்கான சந்தேகத்தை எழுப்புகிறது.