அடுத்தடுத்து சிக்கும் அதிமுக மாஜி அமைச்சர்கள் | ADMK EX Minister | DVAC | Vaithilingam
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராகவும், ஒரத்தநாடு எம்எல்ஏவாகவும் உள்ளார் வைத்திலிங்கம். இவர் 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி வாரிய அமைச்சராக இருந்தார். அமைச்சராக இருந்த போது சென்னை பெருங்களத்தூர் அருகே அடுக்குமாடி கட்டுவதற்கு 27 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. தனியார் நிறுவனம் ஒன்று 57 ஏக்கர் நிலத்தில் 1400 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வேண்டி சிஎம்டிஏவிடம் 2013ல் விண்ணப்பித்தது. 2 ஆண்டுகள் அந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதன் பின் 27.9 கோடி லஞ்சம் பெற்று அனுமதி வழங்கியதாக அறப்போர் இயக்கம் ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார் அனுப்பியது. லஞ்ச பணத்தை நேரடியாக வாங்கவில்லை. வைத்திலிங்கம் மகன்கள், உறவினர் இயக்குநர்களாக உள்ள நிறுவனத்துக்கு கடனாக வழங்கப்பட்டது. ஆனால் கடன் பெற்ற அந்த நிறுவனம் 2014ல் இருந்து ஒரு ரூபாய் கூட வர்த்தகம் செய்யவில்லை.