உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இப்போதைக்கு அமைதி காக்க பழனிசாமி முடிவு | ADMK | BJP | EPS

இப்போதைக்கு அமைதி காக்க பழனிசாமி முடிவு | ADMK | BJP | EPS

2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள கடந்த ஏப்ரல் 11ல் அதிமுக-பாஜ இடையே கூட்டணி உருவானது. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என்று அதிமுக பொதுச்செயலர் பழனிசாமியும், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனும் கூறி வருகின்றனர். இதற்கிடையில் கடந்த 22ம் தேதி, மதுரையில் ஹிந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில், ஈ.வெ.ரா,அண்ணாதுரையை விமர்சித்து வீடியோ ஒளிபரப்பப்பட்டது. முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் இருக்காது என்று நம்பி சென்றோம். ஈ.வெ.ரா., அண்ணாதுரையை விமர்சிப்பதை பொறுக்க மாட்டோம் என அ.தி.மு.க., கண்டனம் தெரிவித்தது. இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு பின், தமிழகத்தில் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும். அதில், பா.ஜ.,வும் ஒரு அங்கமாக கண்டிப்பாக இருக்கும். முதல்வர், அ.தி.மு.க.,வில் இருந்து வருவார் என அமித் ஷா கூறியுள்ளார்.

ஜூன் 28, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S.jayaram
ஜூலை 16, 2025 05:29

ஏன் இந்த தடவை திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டால் அடுத்து அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக களத்தில் இருந்து வெளியேற்றி விடலாம். அப்புறம் அடுத்தமுறை பாஜக ஆட்சி அமைப்பது பற்றி யோசிக்கலாம். இப்பவே குழப்பத்தை உருவாக்கவேண்டாம்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை