உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தலைவர்கள் கட்சி தாவுவதால் ஆட்டம் காணும் அதிமுக! ADMK | EPS | Maitreyan | Ex MP | DMK

தலைவர்கள் கட்சி தாவுவதால் ஆட்டம் காணும் அதிமுக! ADMK | EPS | Maitreyan | Ex MP | DMK

அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை தொடர்ந்து, முன்னாள் எம்பி மைத்ரேயன் திமுகவில் இணைந்தார். தமிழக அரசியலில் பாஜ, அதிமுக என பல முறை கட்சி மாறியவர் மைத்ரேயன். இவர், 1990களில் பாஜவில் இணைந்தார். அந்த கட்சியில் மாநில அளவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த மைத்ரேயன், 2000ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 2002ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்தார். ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் பழனிசாமி - பன்னீர்செல்வம் அணிகள் இடையே மோதல் ஏற்பட்டபோது, பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இருந்த மைத்ரேயன், 2022ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, மீண்டும் பாஜவில் இணைந்த அவர் அந்த கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் அதிமுகவில் கடந்தாண்டு இணைந்தார். அவருக்கு அதிமுகவின் அமைப்பு செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தற்போது மைத்ரேயன் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். தேர்தல் நேரத்தில் அன்வர்ராஜாவை தொடர்ந்து முக்கியமான தலைவர் அதிமுகவில் இருந்து திமுகவில் ஐக்கியமாகி உள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது.

ஆக 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை