உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிமுகவுடன் கூட்டணி பிளான்: கனகச்சிதமாக முடித்த அமித் ஷா admk bjp alliance tamilnadu assembly electi

அதிமுகவுடன் கூட்டணி பிளான்: கனகச்சிதமாக முடித்த அமித் ஷா admk bjp alliance tamilnadu assembly electi

அடுத்த ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த பலமான கூட்டணியை உருவாக்க பாஜ தலைமை திட்டமிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் திமுகவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்ற முடிவுடன் டில்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த எடப்பாடி, அமித் ஷாவுடன் கூட்டணி பேச வில்லை என திரும்ப திரும்ப சொன்னார். ஆனால், அமித் ஷாவோ கூட்டணி பற்றிதான் பேசினோம் என அடுத்த நாளே உடைத்து பேசினார். அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்ய நேற்றிரவு சென்னை வந்தார். இன்று காலை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை அவரது இல்லத்துக்கு சென்று அமித் ஷா சந்தித்தார். கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் இந்த சந்திப்பு நீடித்தது.

ஏப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை