தேர்தல் கமிஷனுக்கு கிரீன் சிக்னல் கொடுத்தது ஐகோர்ட்! | ADMK | EPS | OPS | High Court | Election Comm
அதிமுகவில் உட்கட்சி பிரச்னை இருப்பதால் இரட்டை இலை சின்னம் தொடர்பாக முடிவெடுக்க கூடாது. அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தொடர்பான உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் மனு செய்யப்பட்டது. விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், குமரப்பன் அமர்வு அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு 4 வாரத்திற்குள் முடிவெடுக்க டிசம்பரில் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், வழக்கு தொடர்ந்த சூரியமூர்த்தி ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தேர்தல் கமிஷன் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பழனிசாமி ஐகோர்ட்டில் மனு செய்தார். அதிமுகவில் உறுப்பினராகவே இல்லாதவர்கள் எப்படி தேர்தல் கமிஷனில் மனு செய்ய முடியும்?.