உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உட்கட்சி விவகார வழக்கில் வெல்லப்போவது யார்? | Ex CM O.Panneerselvam | Edappadi Palanisamy | ADMK is

உட்கட்சி விவகார வழக்கில் வெல்லப்போவது யார்? | Ex CM O.Panneerselvam | Edappadi Palanisamy | ADMK is

இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட அதிமுக உள்கட்சி விவகாரங்களை தேர்தல் கமிஷன் விசாரிக்கலாம் என புதனன்று ஐகோர்ட் தீர்ப்பளித்தது. தேர்தல் கமிஷன் விசாரணைக்கு தடை கோரிய பழனிசாமியின் மனுவையும் தள்ளுபடி செய்தது. இரட்டை இலை சின்னம் குறித்தும், தேர்தல் கமிஷன் விசாரிக்க இருப்பது சிக்கலை ஏற்படுத்தலாம்; இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம் என்ற அச்சம், அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது. இதனால் ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக, அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி தரப்பு, சுப்ரீம் கோர்ட்டை நாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பன்னீர் செல்வம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அ.தி.மு.க உள்கட்சி விவகாரம் தொடர்பான, சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக, யாரேனும் மனு தாக்கல் செய்தால், எங்கள் தரப்பு வாதங்களை கேட்ட பின்னரே, எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 2021 சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், 2022 ஜூனில் பழனிசாமி -- பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் கோர்ட்டுக்கு செல்ல, அதிமுக உள்கட்சி விவகாரம், இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் விசாரணையில் இருந்து வருகிறது. அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில், பழனிசாமி பொதுச்செயலராக தேர்வான பின்னும் பிரச்னை தீரவில்லை.

பிப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை