திமுகவினரை கண்டித்து எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் மறியல்
கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே கஸ்தூரிபாளையத்தை சேர்ந்தவர் பாபு. திமுகவில் இருந்த இவர், சமீபத்தில்தான் அதிமுகவில் சேர்ந்தார். கஸ்தூரிபாளையத்தில் நடந்த அதிமுகவின் பூத் கமிட்டி கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்ற விவரங்களை சொல்லுமாறு பாபுவிடம், திமுகவின் நகர செயலாளரும், பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி தலைவருமான விஸ்வ பிரகாஷ் கேட்டு இருக்கிறார். பாபு சொல்ல மறுத்ததால் அவரை பிரகாஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் பாபுவின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரையும் திமுகவினர் தாக்கியதாக தெரிகிறது.
மார் 30, 2025