உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிமுக முக்கிய நிர்வாகி விலகியதால் அதிர்ச்சி | ADMK crisis | ADMK vs DMK | vadavalli chandrasekar re

அதிமுக முக்கிய நிர்வாகி விலகியதால் அதிர்ச்சி | ADMK crisis | ADMK vs DMK | vadavalli chandrasekar re

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வலதுகரமாக வடவள்ளி சந்திரசேகர் அதிமுகவில் இருந்து திடீரென விலகியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்; எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணை செயலராக இருந்தார். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நெருங்கிய நண்பர் மற்றும் வலதுகரமாக கட்சியினரால் அறியப்பட்டவர். அச்சமயத்தில், தமிழகம் முழுதும் அதிகாரமிக்கவராக வலம் வந்தார். கட்சியினர் மட்டுமின்றி, அரசு அதிகாரிகளும், அவரது இல்லத்துக்குச் சென்று காரியங்கள் சாதித்து வந்தனர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் அவரது மனைவி ஷர்மிளாவை போட்டியிடச் செய்து, மேயராக்க திட்டமிட்டனர். அதன்படி, அவரது மனைவியும் 38வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலரானார். மூன்று வார்டுகளில் மட்டுமே அ.தி.மு.க., வெற்றி பெற்றதால் மேயர் கனவு கலைந்தது. 2022ல் வேலுமணி வீடு மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்தபோது, சந்திரசேகரும் சிக்கினார். அவரது வீட்டில் ஒன்பது மணி நேரம் சோதனை நடந்தது. ஆவணங்கள், லேப் டாப் உள்ளிட்ட பொருட்களை போலீசார் கைப்பற்றிச் சென்றனர்.

ஏப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ