அதிமுக - பாஜ கூட்டணி: சந்தேகத்தை கிளப்பும் விஷயங்கள் admk bjp alliance vck dmk congress tamilnadu
டில்லிக்கு திடீரென போய் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்த நாள் முதலே அதிமுக, பாஜ கூட்டணி உறுதியாகி விட்டதாக தமிழக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனாலும், சட்டசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. அப்போது கூட்டணி பற்றி அறிவிப்போம் என எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக கூறி வந்தார் இந்தச் சூழலில், கூட்டணி பற்றி பேச்சு வார்த்தை நடத்த அமித் ஷா நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். பாஜ புதிய மாநில தலைவர் தேர்தலுக்கான நடைமுறைகள் நேற்று கமலாலயத்தில் துவங்கின. புதிய தலைவர் தேர்வை சுமுகமாக நடத்திமுடிக்கவும், கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து பேசவும்தான் அமித் ஷா வந்திருக்கிறார் என தமிழக அரசியல் வட்டாரத்தில் நினைத்திருந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத வண்ணம் அதிமுக, பாஜ கூட்டணி அறிவிப்பை அமித் ஷா திடுதிப்பென வெளியிட்டார். அமித் ஷா, பழனிசாமி கூட்டாக நிருபர்களை சந்தித்தபோது பழனிசாமி எதுவும் பேசவில்லை. பழனிசாமி தலைமையில்தான் தமிழகத்தில் கூட்டணி செயல்படும்; தொகுதி பங்கீடு பற்றி தேர்தல் சமயத்திலும், ஆட்சியில் பங்கு குறித்து தேர்தலுக்கு பிறகும் பேசுவோம் என்றும் அமித் ஷா கூறினார். ப்ரத் அமித் ஷா பேட்டியளித்த ஐடிசி சோழா ஓட்டலில் முதலில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயருடன் டிஜிட்டல் பேனர் பேக்கிரவுண்டில் வைக்கப்பட்டிருந்தது. அது, திடீரென மாற்றப்பட்டு, பாஜ பேனர் வந்தது. எடப்பாடி பழனிசாமி ஓட்டலுக்குள் வந்ததும் தேசிய ஜனநாயக கூட்டணி: தமிழ்நாடு என்ற வாசகத்துடன் பேனர் மறுபடியும் மாற்றப்பட்டது.