பாஜவை கழற்றிவிடும் அதிமுக-ஷாக் ரிப்போர்ட் admk vs dmk | admk vs bjp | tvk vijay | admk tvk alliance
பாஜ வெளியே... தவெக உள்ளே? அமித்ஷா, அ.மலைக்கு செக் பழனிசாமி ஆட்டம் ஆரம்பம் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போதே தமிழக அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. ஒரு பக்கம், ஓரணியில் தமிழ்நாடு என்று பிரசாரத்தை ஆரம்பித்து இருக்கிறது திமுக. இன்னொரு பக்கம், ‛மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்று களம் இறங்கி இருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. இப்படி இரு பிரதான கட்சிகளும் மல்லுக்கட்ட ஆரம்பித்து இருக்கும் நிலையில், கூட்டணி கணக்கு மட்டும் இன்னும் இடிக்கிறது. திமுகவை பொறுத்தவரை 2019ல் இருந்து கூட்டணியை சிதறவிடாமல் வைத்திருக்கிறது. அதன் தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட 10 கட்சிகளும் அப்படியே இருக்கின்றன. ஆனால் அதிமுக கூட்டணிக்குள் பாஜ மட்டுமே இப்போதைக்கு வந்திருக்கிறது. ஏப்ரல் 11ல் அதிமுக-பாஜ கூட்டணி அறிவிக்கப்பட்ட போது, இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்குள் வரும் என்றார். 3 மாதம் ஆகியும் எந்த கட்சியும் வரவில்லை. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்களை இழுக்க அதிமுக எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. இன்னொரு பக்கம் அதிமுக, பாஜ கூட்டணிக்கும் மோதல் வலுக்கிறது. அதிமுக கூட்டணி வென்றதும், கூட்டணி ஆட்சி நடக்கும் என்று பல பாஜ தலைவர்கள் சொல்லி வந்தனர். இதற்கு பதிலடி கொடுத்த பழனிசாமி, தேர்தலுக்கு மட்டும் தான் கூட்டணி; ஆட்சியில் கூட்டணிக்கு பங்கு கிடையாது என்று அதிரடி காட்டினார்.