அதிமுக வெற்றியை தட்டிப்பறித்த தினகரன், சசிகலா | ADMK Victory | Snatched TTV, Sasikala | Tamilnadu Po
அதிமுக வெற்றியை தட்டிப்பறித்த தினகரன், சசிகலா | ADMK Victory | Snatched TTV, Sasikala | Tamilnadu Politics | Election 2026 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக உடைந்தது. அதைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையை ஏற்க மறுத்து தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் பெயரில் புதிய கட்சி துவங்கினார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக மற்றும் திமுகவிற்கு மாற்றாக தனித்து போட்டியிட்டது. அமமுக சொந்த சின்னமான குக்கர் சின்னத்தில் களம் கண்டது. அந்தத் தேர்தலில் தொகுதி வாரியாக 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ஓட்டுக்கள் வரை அமமுக அள்ளியது. இதனால் அதிமுக வேட்பாளர்கள் நின்ற தொகுதிகளில் அமமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு ஓட்டுக்களை பிரித்து அதிமுக தோல்விக்கு வித்திட்டனர். உதாரணமாக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் உத்திரமேரூர் தொகுதி அமமுக வேட்பாளர் ரஞ்சித்குமார் 7211 ஓட்டுக்கள் பெற்றார். அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம் 91,805 ஓட்டுக்கள் பெற்றார். திமுக வேட்பாளர் சுந்தர் 93427 ஓட்டுகள் பெற்று 1622 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு அமமுகவை கூட்டணியில் சேர்த்திருந்தால் 5589 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம் வெற்றி பெற்றிருப்பார். குறிப்பாக தென்மாவட்டங்களில் அதிமுக, அமமுக கட்சிகள் ஒரே தொகுதியில் எதிரும், புதிருமாக போட்டியிட்டதால் வெற்றி வாய்ப்பு கண்முன்னே பறிபோனது. இந்தத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் அமமுக, அதிமுக இணைந்து களம் கண்டது. எனினும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை #ADMKVictory #TTVDhinakaran #Sasikala #TamilNaduPolitics #Election2026 #TNPolitics2026 #AIADMK #PoliticalNewsTN #ElectionUpdates #DravidianPolitics