மலையேற்றத்தில் சாதனை படைக்கும் புதுச்சேரி வீராங்கனை! Mountaineering and Adventure Sports | Divya | P
புதுச்சேரி அருகே கூனிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா. பொறியியல் பட்டதாரியான இவருக்கு வயது 29. சிறுவயதில் பெற்றோரை இழந்ததால் திவ்யா தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்டார். திவ்யா புனேயில் படிக்கும் போது மலையேறும் பயிற்சி எடுக்க ஆர்வம் உண்டானது. சிறுபயிற்சிக்கு பின்னர் ஊர் திரும்பிய அவர் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். ஒருங்கிணை பண்ணை விவசாயத்தில் ஆர்வமுடன் செயல்பட்டு வந்தபோது கோவிட் லாக்டவுனால் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மீண்டும் தனக்கு ஆர்வமுள்ள மலையேற்ற பயிற்சிக்கு திரும்பினார். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மலையேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விளையாட்டு நிறுவனத்தில் (NIMAS) மலையேறுதல் மற்றும் பனிப்பாறை பயிற்சியை முடித்தார். மேலும் மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள கார்டியன் கிரிபெர்மி மலையேறுதல் நிறுவனத்தில் (GGIM) அடிப்படை மற்றும் மேம்பட்ட பாறை ஏறுதல் பயிற்சியை பெற்றார். பேட்டி: திவ்யா மலையேறும் வீராங்கனை 00.01 - 01.48 அண்மையில் இந்திய இமயமலை தொடர்களில் அல்பைன் ஸ்டைலில் 6,111 மீட்டர் உயரமுள்ள மலையை திவ்யா ஏறி முடித்துள்ளார். தொடர்ந்து கார்கிலில் உள்ள 7,077 மீட்டர் உயரமுள்ள குன்மலை மற்றும் 7,135 மீட்டர் உயரமுள்ள நன்மலை ஆகியவற்றை தொடர்ச்சியாக ஏறினார். இந்த மலைகளை தொடர்ச்சியாக ஏறிய முதல் தமிழ் பெண் திவ்யா தான். இதற்கு மொத்தம் 8 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது. புதுச்சேரி அரசு திவ்யாவுக்கு 3 லட்ச ரூபாய் ஸ்பான்சர்ஷிப் கொடுத்து உதவியது. இமயலை தொடரில் இன்னும் யாருடைய காலடி தடங்களும் படாத மலைகள் பல உள்ளன. அவற்றின் மீது ஏறுபவர்கள் அதற்கு பெயர் சூட்டி கொள்ளலாம். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த மலையேற்ற குழுவை உருவாக்கி, யாரும் ஏறாத மலைகளில் ஏறி அதற்கு தமிழ் பெயர் வைக்க வேண்டுமென்பது திவ்யாவின் லட்சியமாக உள்ளது.