உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதலீட்டாளர்களின் சொர்க்கம் ஆப்கன்: அமைச்சர் அல்ஹாஜ் நுாருதீன் பெருமிதம் Afghan call

முதலீட்டாளர்களின் சொர்க்கம் ஆப்கன்: அமைச்சர் அல்ஹாஜ் நுாருதீன் பெருமிதம் Afghan call

இந்தியா - ஆப்கன் உறவை மேம்படுத்தவும், ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை உயர்த்தவும் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், அந்நாட்டில் தொழில் துறை மேம்பாட்டிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையில் ஆப்கன் அரசு தீவிர கவனம் செலுத்த துவங்கியுள்ளது. அந்த வகையில், அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த ஆப்கன் அமைச்சர் அல்ஹாஜ் நுாருதீன் ஆப்கனில் இந்திய தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் தொழில் முதலீடுகளுக்கான நல்ல சூழல் நிலவுகிறது. அங்கு முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர அரசு தயாராக உள்ளது. குறிப்பாக, இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் ஆப்கனில் தொழில் துவங்க வேண்டும். அங்கு முதலீடு செய்வதால், நிறுவனங்கள் பல வகையில் பலன் அடைய முடியும். பல நிறுவனங்கள் அங்கு முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. உலக அரங்கில் ஆப்கன் முதலீட்டிற்கான மிகச் சிறந்த மையமாக விளங்குகிறது. குறிப்பாக, அதை முதலீட்டாளர்களின் சொர்க்கம் என்றே கூறலாம். தொழில், வர்த்தகம், முதலீட்டு துறையில் இந்தியாவுடனான உறவை ஆப்கன் மேலும் வலுப்படுத்த விரும்புகிறது என, ஆப்கன் அமைச்சர் நுாருதீன் கூறினார்.

நவ 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி