ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே பயங்கர சண்டை: இருதரப்பு தாக்குதலில் பலர் உயிரிழப்பு
#AfghanistanPakistanWar #Afghanfight #PakistanTerroist #Taliban #Pak #Afghan #Fight #War பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. எல்லை பிரச்னை உட்பட, தங்கள் நாடுகளில் பயங்கரவாத செயல்களை மறுதரப்பு ஆதரிப்பதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான நுாரிஸ்தானில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதாகவும், அவர்களில் 40 பேர் சுட்டுக்கொல்லப்பட்தாகவும் ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து, தங்கள் நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற ஐஎஸ் பயங்கரவாதிகள் 40 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 62 பேர் உயிருடன் பிடிபட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இது குறித்து விளக்கம் அளிக்கும் படி, பாக்., துாதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. எனினும், பாகிஸ்தானிடம் இருந்து இது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் மீதான பாக்., படை தாக்குதலில் ஆப்கானை 22 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் எவனவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஆப்கானின் குனார் மாகாணத்தில் பாக்., படை நடத்திய தாக்குதலில், குழந்தைகள், பெண்கள் என 9 அப்பாவிகள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. இரு தரப்பு சண்டையால், இரு நாட்டு எல்லையிலும் பதற்றம் நீடிக்கிறது.