எதிரிகளை துவம்சம் செய்ய புதிய டெக்னாலஜி ரெடி agni prime missile from train| agni-prime missile launc
இந்தியா முதல் முறையாக ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணையை ஏவி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு இதனை உருவாக்கி உள்ளது. வெற்றிகரமாக சோதனை செய்த டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். அக்னி பிரைம் ஏவுகணை 2000 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரயில் அடிப்படையிலான மொபைல் லாஞ்சரில் இருந்து ஏவப்படும். பயணிகள் ரயிலிலும் இதனை இணைத்து நாட்டின் எந்த மூலைக்கும் மிக எளிதாக கொண்டு சென்று ஏவ முடியும். அக்னி பிரைம் ஏவுகணையில் அதிநவீன டெக்னாலஜி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அணு ஆயுதங்களையும் ஏந்தி செல்லும். ரஷ்யா, சீனா, அமெரிக்காவும் இதே போன்று, ரயில் அடிப்படையிலான ஏவுகணை ஏவும் டெக்னாலஜியை கொண்டுள்ளன. அந்த பட்டியலில் இப்போது இந்தியாவும் இணைந்துள்ளது. இதே போன்ற ஏவுகணை சோதனையை செய்ததாக, வடகொரிய, தென்கொரியா, ஜப்பானும் கூறி வருகின்றன. இந்தியாவில் சுமார் 70 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு ரயில் பாதைகள் உள்ளது. இது உலகின் 4வது பெரிய நெட்ஒர்க். இதனால், மொபைல் ஏவுகணை லாஞ்சரை நாட்டின் எந்த இடத்திற்கும் கொண்டு செல்வது எளிது. எதிரிகளின் சாட்டிலைட் கண்ணில் படாத வகையில் ரயில் சுரங்க பாதையில் மறைத்து வைக்கவும் முடியும். டிரக் லாஞ்சர் மூலம் சாலை வழியாக சென்று அக்னி பிரைம் ஏவுகணை ஏவும் டெக்னாலஜி ராணுவத்தில் இருக்கிறது. தற்போது, ரயிலில் இருந்தும் ஏவுகணை ஏவுவது நமது ராணுவத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கும். #AgniPrime #MissileLaunch #DefenceTechnology #IndianArmy #AgniMissile #TrainFiredMissile #MilitaryStrength #NationalSecurity #DefenseInnovation #MissileDemo #IndigenousDefense #DRDO #StrikePower #SmartWeapons