உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Air India விமானம் வெடிக்கும் அதிர்ச்சி காட்சி ahmedabad plane crash | A171 AI Flight | mayday alert

Air India விமானம் வெடிக்கும் அதிர்ச்சி காட்சி ahmedabad plane crash | A171 AI Flight | mayday alert

குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா ஏ171 என்ற விமானம், டேக் ஆப் ஆன சில நொடிகளில் ஏர்போர்ட் பக்கத்திலேயே மைதானத்தில் விழுந்து வெடித்தது. விமானம் இருந்த தடமே தெரியாத அளவு தீப்பிடித்து சாம்பலானது. 242 பேர் கதி என்னவென்று உடனடியாக தெரியவரவில்லை. இதற்கிடையே ஏர்போர்ட் பக்கத்தில் விமானம் தாழ்வாக பறந்து கீழே விழுந்து வெடிக்கும் காட்சி வெளியாக நெஞ்சை பதற வைத்துள்ளது.

ஜூன் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி