உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒவ்வொருவர் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி அறிவித்த டாடா | ahmedabad plane crash | A171 AI Flight | ta

ஒவ்வொருவர் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி அறிவித்த டாடா | ahmedabad plane crash | A171 AI Flight | ta

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டேக் ஆப் ஆகும் போது வெடித்து சிதறியது. விமானத்தில் இருந்த பயணிகள் உடல் சிதறி பலியானார்கள். இதுவரை 204 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. ஆமதாபாத் ஏர்போர்ட்டுக்கு பக்கத்தில் உள்ள மெடிக்கல் காலேஜ் வளாகத்தில் தான் விமானம் விழுந்து நொறுங்கியது. அங்குள்ள மெஸ் மற்றும் விடுதி கட்டடங்கள் சேதம் அடைந்தன. 5 மாணவர்கள் மரணம் அடைந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கிப்போட்டு இருக்கிறது. இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை நடத்தி வரும் டாடா குழுமம் இந்த துயர சம்பவத்துக்கு வேதனை தெரிவித்துள்ளது. 242 பேருடன் ஏர் இந்தியா ஏ171 விமானம் விபத்தில் சிக்கியது மிகுந்த வேதனை அளிக்கிறது. நாங்கள் உணரும் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்காகவும் காயம் அடைந்தவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம். இந்த துயர சம்பவத்தில் மரணம் அடைந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் டாடா குழுமம் தலா ஒரு கோடி ரூபாயை வழங்கும். காயம் அடைந்தவர்களின் மருத்துவ செலவு மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை ஏற்றுக்கொள்ளும். பிஜே மெடிக்கல் காலேஜில் இடிந்த கட்டடங்களை நாங்கள் கட்டிக்கொடுப்போம். கற்பனை கூட பண்ண முடியாத இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் டாடா குழுமம் துணை நிற்கும் என்று டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் கூறி உள்ளார்.

ஜூன் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி