உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இவ்வளவு உயிர்களை காப்பாற்ற முடியாமல் போனது ஏன்? ahmedabad plane crash | amit shah | air india a171

இவ்வளவு உயிர்களை காப்பாற்ற முடியாமல் போனது ஏன்? ahmedabad plane crash | amit shah | air india a171

குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்ட விமானம் ஏர்போர்ட் பக்கத்திலேயே விழுந்து வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 204 பேர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டுமே உயிர் தப்பி உள்ளார். மற்றவர்கள் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. ஆமதாபாத் ஏர்போர்ட் பக்கத்தில் உள்ள மெடிக்கல் காலேஜ் வளாகத்தில் விழுந்து தான் விமானம் வெடித்தது. இதில் நிறைய டாக்டர்கள் காயம் அடைந்தனர். 5 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைந்தார். விபத்து நடந்த இடத்தையும் மீட்பு பணிகளையும் அவர் பார்வையிட்டார். விமாத்தில் உயிர் தப்பிய விஷ்வாஸ் குமாரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்

ஜூன் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ