2 நிமிடம் போதும்! பொருளின் தரத்தை காட்டும் AI | Agriculture | Coimbatore
ஏஐ(AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும் வந்துவிட்டது. மருத்துவம், பொறியியல், பொழுதுபோக்கு, அரசாங்க நடவடிக்கை என ஏஐ இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வேரூன்றி இருக்கிறது. பயன்படுத்த எளிமை, நேரம், செலவு மிச்சம் என பல நன்மைகள் இருப்பதால் ஏஐ இல்லாத இடங்களில் கூட அதனை புகுத்தும் முயற்சிகள் நடக்கிறது. அந்த வகையில் விவசாயிகள் செய்யும் உற்பத்தி செய்யும் மஞ்சள், சிரகம், மிளகு உட்பட உணவில் சேர்க்கப்படும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய ஏஐ தொழில்நுட்பத்தில் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து நம்மிடையே பகிர்கிறார் ஏஐ கருவி உருவாக்கிய நிறுவனத்தின் CEO பத்மினி.
நவ 14, 2024