உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காங்கிரசின் அரசியல் நாடகம்: அம்பலப்படுத்திய அண்ணாமலை AI Summit Congress Drama Annamalai

காங்கிரசின் அரசியல் நாடகம்: அம்பலப்படுத்திய அண்ணாமலை AI Summit Congress Drama Annamalai

தமிழக பாரதிய ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐந்து லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்களை வரவழைத்த டில்லி ஏஐ மாநாட்டில் இளைஞர் காங்கிரசார் அத்துமீறி புகுந்து நாட்டை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டனர். சம்பவம் முடிந்து 24 மணி நேரம் ஆகியும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் இன்னும் இதை கண்டிக்கவில்லை. காங்கிரஸ் இந்த நாட்டின் தேசிய அவமானம் என்பதை இச்சம்பவம் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இந்த மாநாட்டின் வெற்றியை காங்கிரஸ் விரும்பவில்லை என்றாலும் அது நமது நாட்டின் தற்சார்பு ஏஐ வலிமையை இந்த உலகிற்கு வெளிப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக மாநாட்டில் சர்வம் ஏஐ, ஞானி ஏஐ மற்றும் பாரத் ஜென் ஏஐ என மூன்று முக்கியமான உள்நாட்டு ஏஐ தொழில் நுட்பங்கள் இடம் பெற்றன.

பிப் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ