தொடர் தோல்வியால் பழனிசாமிக்கு அதிகரிக்குது நெருக்கடி | AIADMK | Palanisami | PMK | NTK | Vikravandi
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக ஓட்டுகளை திமுக மொத்தமாக சுருட்டியுள்ளதால் பழனிசாமிக்கு கட்சியில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரிந்து சென்றவர்களை எல்லாம் ஒன்றிணைக்க வேண்டும் என பலரும் போர்க்கொடி தூக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிமுக மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையில் தேமுதிக, எஸ்டிபிஐ, தவிர வேறு எந்த பெரிய கட்சியும் கூட்டணியில் இணையவில்லை. எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்து திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வென்றது. அதிமுகவின் ஓட்டு சதவீதம் குறைந்தது. தென் மாவட்டங்களில் மூன்றாம் இடத்துக்கு சென்றது. திருநெல்வேலி உள்ளிட்ட சில தொகுதிகளில் நான்காம் இடம் பெற்றதோடு, டிபாசிட்டையும் இழந்தது.