மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது முடியும்? | AIIMS Madurai | Madurai AIIMS construction
மதுரை எய்ம்ஸ் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? ஆர்டிஐ சொன்ன தகவல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என 2018ல் அறிவிக்கப்பட்டது. 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 221 ஏக்கரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடத்தின் திட்ட மதிப்பு 2,021 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன் கட்டுமானப்பணிகள் இப்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன. முன்னதாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என தென்காசியை சேர்ந்த பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு இருந்தார். இதற்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027 பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வரும். முதற்கட்டமாக 1,118 கோடியில் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. வெளி நோயாளிகள் பிரிவு, சேவை பிரிவு கட்டடங்கள், மருத்துவ கல்விசார் கட்டடம், நர்சிங் கல்லூரி, மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகள், உணவு கூடம் போன்ற கட்டுமான பணிகள் நடக்கிறது. சென்னையை சேர்ந்த கட்டுமான நிறுவனத்துடன் கட்டுமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 2024 மே 22ல் கட்டுமானம் தொடங்குவதற்கு கடிதம் வழங்கபட்டது.