உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜார்கண்டில் மோசமான வானிலையால் விழுந்து நொறுங்கிய ஏர் ஆம்புலன்ஸ்! Air Ambulance Crash | |Jharkhand Ra

ஜார்கண்டில் மோசமான வானிலையால் விழுந்து நொறுங்கிய ஏர் ஆம்புலன்ஸ்! Air Ambulance Crash | |Jharkhand Ra

ஜார்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சய்குமார். 41 வயதான இவருக்கு சில நாட்களுக்கு முன் தீக்காயம் ஏற்பட்டது. ராஞ்சியில் உள்ள ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக டில்லிக்கு மாற்ற மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர். இதற்காக தனியார் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. நோயாளி மற்றும் மருத்துவக்குழுவினர் என 7 பேர் ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 7 மணியளவில் புறப்பட்டனர். விமானம் டேக் ஆப் ஆன 35வது நிமிடத்தில் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது. இதனால் விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக அவசர நிலையை அறிவித்தனர். பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சத்ரா மாவட்டத்தின் சிமாரியா அருகே உள்ள வனப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியானது. #Jharkhand |#AirAmbulanceCrash |#Ranchi |#NewDelhi |#PlaneCrash |#BreakingNews |#AviationAccident |#IndiaNews |#Chatra |#EmergencyFlight

பிப் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ