பாக் ட்ரோன்களை கொத்து கொத்தாக பொசுக்கிய ஆயுதம் | ind vs pak | air defence system | indian army
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே பெரிய போர் வெடித்தது. 4 நாள் நடந்த போரில் பாகிஸ்தான் ராணுவத்தை இந்தியா ஓட ஓட அடித்தது. தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்சியதால் போரை நிறுத்தியது இந்தியா. போரின் போது சீனாவுடன் சேர்ந்து தயாரித்த ட்ரோன்கள் மற்றும் கடைசி நேரத்தில் துருக்கி கொடுத்த ட்ரோன்களை பெரிய அளவில் தாக்குதலுக்கு பயன்படுத்தியது பாகிஸ்தான். ஒரு ட்ரோனை கூட ஊடுருவ விடாமல் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டுப்பொசுக்கின. அப்படி எதிரி ட்ரோன்களை கொத்து கொத்தாக சுட்டு பொசுக்கிய ட்ரோன் தடுப்பு சிஸ்டத்தை, இன்று சுதந்திர தினத்தையொட்டி காஷ்மீர் எல்லையின் தன்ங்தார் என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் காட்சிபடுத்தினர். எப்படி ட்ரோன்களை சுட்டோம் என்பதை செய்து காட்டினர்.