உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட எல்லாம் ரெடி

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட எல்லாம் ரெடி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின் இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. பயங்கரவாதத்தை வளர்த்து இந்தியாவுக்கு எதிராக ஏவி விடும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட இந்தியா தயாராகி வருகிறது. இந்தியா எந்த மாதிரியான தாக்குதலை நடத்தப்போகிறது என்ற பீதியில் இருக்கிறது பாகிஸ்தான். இச்சூழலில், ராணுவ நடவடிக்கை தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி உள்ளார். ஏற்கனவே கடந்த 26ம் தேதி ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மும்படை தலைமை தளபதி அனில் சவுகான் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் பாகிஸ்தானுக்குஎதிரான நடவடிக்கைக்கு ராணுவத்துக்கு அவர் முழு சுதந்திரம் வழங்கினார்.

மே 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !