உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 154 பேருடன் சென்னை வந்த விமானத்தில் நடந்தது என்ன? | Air India | Mumbai To Chennai

154 பேருடன் சென்னை வந்த விமானத்தில் நடந்தது என்ன? | Air India | Mumbai To Chennai

மும்பையில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று இரவு 11 மணிக்கு, 148 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 154 பேருடன் சென்னைக்கு புறப்பட தயாரானது. ஆனால் அந்த விமானம் தொழில்நுட்ப காரணங்களால் 1 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12 மணிக்கு, சென்னைக்கு புறப்பட்டது. நடுவானில் சென்னையை நோக்கி பறந்து கொண்டு இருந்தது. அப்போது 22 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பைலட் மும்பை ஏர்போர்ட் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். மீண்டும் மும்பை ஏர்போர்ட்கே திரும்பி வர உத்தரவிடப்பட்டது. ஒரு சில நிமிடங்களில் விமானம் மும்பையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானப் பொறியாளர்கள் குழுவினர் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இயந்திர கோளாறுகளை உடனடியாக சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். ஏர் இந்தியா விமான நிறுவனம் மாற்று விமானத்தை பயணிகள் அனைவருக்கும் ஏற்பாடு செய்தது.

ஜூன் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ