சவுதியில் ஹவுதிப் படை தாக்குதல் தீவிரம்: ஏர் இந்தியா விமான சேவை தற்காலிகமாக ரத்து
#AirIndiaflightCancelled #AirIndia #AirIndiaExpress #Hauthi #SaudiAirportonAttack #Yemen #Saudi #Iran ஏமன் ராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களான ஹவுதி பயங்கரவாத படைக்கும் இடையே நீண்ட நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. ஏமன் அரசுக்கு, சவுதி அரேபியா உதவி வருவதால், ஹவுதி பயங்கரவாதிகளின் இலக்கு, சவுதியை நோக்கி நகர்ந்துள்ளது. சவுதியின் முக்கிய ஏர்போர்ட்கள் மீது, ஹவுதிப் படை நடத்திய தாக்குதலில், இந்தியர் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 13 பேர் சமீபத்தில் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. சவுதியில் உள்ள முக்கிய மூன்று ஏர்போர்ட்களிலும், ஹவுதிப்படை ட்ரோன் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. பொதுமக்கள், சர்வதேச பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் படி, அந்நாட்டு அரசும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், பயணிகள் பாதுகாப்பு கருதி, சவுதி அரேபியாவின் ஜெட்டா, ரியாத், தமாம் ஏர்போர்ட்களுக்கான விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதாக, ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. அக்டோபர் 24ம் தேதி வரை, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இந்நகரங்களுக்கு செல்லாது என, விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன் அக்டோபர் 9 முதல் 15 வரையிலான காலகட்டத்தில், சவுதிக்கு செல்வதற்காக டிக்கெட் புக் செய்தவர்கள், தங்கள் பயண தேதியை அக்டோபர் 24க்கு பின் நவம்பர் 10ம் தேதிக்குள் இலவசமாக மாற்றி அமைத்துக்கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.