உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆமதாபாத் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய பெண்

ஆமதாபாத் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய பெண்

குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் ரக விமானம் டேக் ஆப் ஆன சில நிமிடங்களில் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் 230 பயணிகள் 2 பைலட் உட்பட 12 ஊழியர்கள் என 242 பேர் இருந்தனர். இதில் 241 பேர் விபத்தில் உடல் கருகி இறந்துவிட்டனர். இந்த விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்கள் 2 பேர். ஒருவர் விமானத்தில் பயணம் செய்த விஸ்வாஸ் குமார். மற்றொருவர் அந்த விமானத்தை தவற விட்ட பெண் பூமி சவுஹான். விமானத்தில் சென்ற விஸ்வாஸ் குமார் அவசரகால கதவு பக்கத்தில் இருக்கும் 11ஏ சீட்டில் சென்றார். விமானம் கீழே விமானம் கீழே விழுந்து வெடிப்பதற்கு ஓரிரு நெடிகள் முன் அவசரகால கதவு வழியாக கீழே குதித்து உயிர் தப்பி இருக்கிறார். பூமி கவுகான் என்ற பெண் ஏர் இந்தியா விமானத்தில் லண்டன் செல்வதற்காக டிக்கெட் புக் செய்து இருந்தார். விமானத்தை பிடிப்பதற்காக ஏர்போர்ட் சென்று கொண்டு இருந்தார். ஆனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக, ஏர்போர்ட் செல்வதற்கு 10 நிமிடம் தாமதம் ஆனது. அதற்குள் அவர் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு விட்டது. ஆனால் சில நிமிடங்களிலேயே அது கீழே விழுந்து வெடித்து சிதறியது. அந்த விமானத்தை தவற விட்ட பூமி சவுகானுக்கு அது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அவர் கூறும்போது, விபத்தை அறிந்து என் உடல் அப்படியே நடுங்கிபோய்விட்டது. விமானத்தில் சென்றவர்கள் இறந்தை அறிந்து உடைந்து போய்விட்டேன். என்னால் பேசகூட முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக நான் உயிர் தப்பி இருக்கிறேன். அதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் அதிர்ச்சியுடன் பூமி சவுகான் கூறினார். லண்டனில் கணவருடன் வசிக்கும் பூமி, 2 வருடங்களுக்கு பிறகு விடுமுறைக்காக இந்தியா வந்துவிட்டு திரும்பி லண்டன் செல்ல இருந்தபோதுதான் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

ஜூன் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ