ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரை இறங்கியது இப்படித்தான் air india| trichy flight| trichy airport
திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து சார்ஜாவுக்கு நேற்று மாலை ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. 144 பயணிகள் இருந்தனர். டேக் ஆப் ஆன சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானிகள் கண்டறிந்தனர். விமானத்தின் சக்கரங்கள் உள்ளே இழுத்துக்கொள்ளவில்லை. அதன் ஹைடிராலிக்கில் ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்தனர். பொதுவாக விமானம் டேக் ஆப் சில நிமிடங்களில் அதன் சக்கரங்களை உள்ளே செல்வதற்கான வேலைகளை விமானிகள் செய்து விடுவார்கள். சக்கரங்கள் உள்ளே செல்லாததால், விமானிகள் உடனே கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவித்தனர். பாதுகாப்பு கருதி மீண்டும் விமானத்தை திருச்சியிலேயே தரை இறக்க முடிவு செய்தனர். உடனே திருச்சி ஏர்போர்ட்டில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் துரித கதியில் செய்தனர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் மற்றும் மருத்துவ குழு தயார் நிலையில் இருந்தன. பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தாமல் இருக்க, விமானத்தில் இப்படியொரு பிரச்னை இருப்பது பற்றி அவர்களுக்கு தெரியப்படுத்த படவில்லை. இதுபோன்ற சூழலில், பாதுகாப்பு வழிகாட்டு நடைமுறைகளின்படி, விமானத்தின் எரிபொருளை ஓரளவுக்கு குறைக்க வேண்டும். இதன் மூலம் விமானத்தின் எடையும் குறையும். அதன் பின்தான் லேன்டிங் செய்ய வேண்டும். சார்ஜா வரை செல்ல வேண்டும் என்பதால், விமானத்தில் எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டு இருந்திருக்கும்.