தடையை மீறுவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவு! Air Pollution | Sound Pollution | TN Govt
வீடுகளின் அருகே இரவு நேரத்தில் ஹாரன் அடிக்க, பட்டாசு வெடிக்க தடை! வீடுகளின் அருகே இரவு நேரங்களில் ஹாரன் அடித்தால், பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்த, அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தொழிற்சாலை பகுதிகளில் காலை 6 முதல் இரவு 10 மணி வரை 75 டெசிபல்; இரவு 10 முதல் காலை 6 மணி வரை 70 டெசிபல்; குடியிருப்பு பகுதிகளில் பகலில் 55 டெசிபல், இரவில் 45 டெசிபல்; மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ள அமைதி மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில், பகலில் 50 டெசிபல், இரவில் 40 டெசிபல் தான் ஒலியின் அளவு இருக்க வேண்டும். அதை மீறி ஒலி மாசு ஏற்படுத்துவோர் மீது, கலெக்டர்கள், எஸ்.பி.க்கள், மாநகர போலீஸ் கமிஷனர்கள், டி.எஸ்.பி.க்கள், சப்-கலெக்டர்கள், ஆர்.டி.ஓ.க்கள் நடவடிக்கை எடுக்கலாம். குறிப்பிட்ட மண்டலங்களில் ஒலி மாசை நிர்ணயிக்கப்பட்ட அளவில் வைத்திருப்பது, அந்தந்த அதிகாரிகளின் பொறுப்பு.