உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கூட்ட நெரிசலில் சிக்கி பலர் அட்மிட்! | Air show chennai | Air Force | Chennai | Chennai Marina

கூட்ட நெரிசலில் சிக்கி பலர் அட்மிட்! | Air show chennai | Air Force | Chennai | Chennai Marina

உயர்கிறது எண்ணிக்கை பரிதாபமாக போனது 5 உயிர்! சென்னை மெரினா பீச்சில் நடந்த விமானப் படை சாகச நிகழ்ச்சியை காண இன்று 15 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டனர். நிகழ்ச்சியின் இடையே வெயிலின் தாக்கம் மற்றும் கூட்ட நெரிசலால் சிலர் மயங்கி விழுந்தனர். நிகழ்ச்சி முடித்து திரும்பும் போது நெரிசலில் சிக்கி பலர் மயங்கினர். இப்படி 90க்கும் மேற்பட்டோர் ஆஸ்பிடல்களில் அட்மிட் செய்யப்பட்டனர். இதில் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான், வயது 56, முதலில் இறந்தார். பின் திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன் வயது 34, ராயப்பேட்டை தினேஷ்குமார் வயது 37, பெருங்களத்துாரை சேர்ந்த சீனிவாசன் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர். இப்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மரக்காணத்தை சேர்ந்த மணி என்பவரும் மரணம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. நெரிசலில் சிக்கி 20க்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, வெயிலின் தாக்கத்தால் இறந்துள்ள செய்திகள் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றன.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ