உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்க டெக் நிறுவனங்கள் கண்ணில் விரல் விட்டு ஆட்டும் இந்திய சிறுமி | Pranjali Awasthi | Delv.AI

அமெரிக்க டெக் நிறுவனங்கள் கண்ணில் விரல் விட்டு ஆட்டும் இந்திய சிறுமி | Pranjali Awasthi | Delv.AI

தொழில்நுட்ப உலகில் வயது என்பது வெறும் எண் தான் என்பதை நிரூபித்துள்ளார் 18 வயதான பிரஞ்சலி அவஸ்தி. 18 வயதில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏஐ நிறுவனத்தின் அதிபர் என்கிற பெருமையை பெற்றுள்ளார். சிறு வயதில் இவ்வளவு பெரிய சாதனை படைத்துள்ள பிரஞ்சலி 2007ல் இந்தியாவில் பிறந்தவர். இவரது 11வது வயதில் பெற்றோர் அமெரிக்காவுக்கு குடியேறி உள்ளனர். அமெரிக்காவுக்கு போகும் முன்பே 7 வயதில் இருந்து கோடிங் கற்றுக்கொண்டார். பள்ளியில் கணினி அறிவியல்பாடத்திற்கு அதிக ஆர்வம் காட்டினார். 13 வயதில் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தின் நியூரல் டைனமிக்ஸ் ஆஃப் கண்ட்ரோல் ஆய்வகத்தில் இன்டர்ன்ஷிப் முடித்தார். அப்போது ChatGPT-3 பீட்டா வெளியானது. இது அவருக்கு ஏஐயில் ஐடியாக்களைத் தூண்டியது. கோவிட் காலத்தில் வீட்டில் இருந்து ஆன்லைன் பள்ளி படித்துக்கொண்டே Machine Learning படிப்புகளை முடித்தார். 2021ல் தனது 15 வயது பிறந்தநாளன்று Delv.AI என்கிற தனது தயாரிப்பின் பீட்டா பதிப்பை Product Hunt இணையதளத்தில் வெளியிட்டார். 2022 தனியாக ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினார். நிறுவனம் தொடங்கிய ஒரே வருடத்தில் 100 கோடி ரூபாய் மதிப்புடையதாக மாறி இருக்கிறது. Delv.AI என்பது ஏஐ அடிப்படையிலான இணையதளமாகும். PDF, ஆவணங்கள் மற்றும் ஆன்லைன் டேட்டாகளில் இருந்து அதில் உள்ள தரவுகளை மட்டும் தனியே எடுத்து தரும். இது ஆராய்ச்சியாளர்களுக்கு மிக முக்கியமானது. ஏனெனில் இது மீண்டும் மீண்டும் செய்யப்படும் ஆராய்ச்சி பணிகளை 75 சதவிகிதம் வரை குறைக்கிறது, நேரத்தை சேமிக்கிறது. இப்போது பிரஞ்சலி உருவாக்கிய தளத்துக்கு 10,000க்கும் மேற்பட்ட பயனர்கள் 15 நாடுகளில் உள்ளனர். ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்காவில் R&D நிறுவனங்களுடன் இணைந்தும் செயல்படுகிறது. நிறுவனத்தில் 10 ஊழியர்கள் உள்ளனர். பிரஞ்சலி கோடிங், வாடிக்கையாளர் சேவை, இயக்கம் என பல பணிகளை செய்கிறார். இப்போது ஜார்ஜியா தொழில்நுட்ப கல்லூரியில் கணினி அறிவியல் இளங்கலை படிக்கும் பிரஞ்சலி, சான் பிரான்சிஸ்கோவில் Dash என்கிற இன்னொரு ஸ்டார்அப் உருவாக்கி வருகிறார். 18 வயதுக்குள் மலைக்க வைக்கும் இத்தனை சாதனை செய்துள்ள பிரஞ்சலிக்கு அவரது தந்தை சப்போர்ட் அதிகம். கணினி பொறியாளரான அவரது தந்தை, கோடிங் மீதான அவரது ஆர்வத்தை முதலில் ஊக்குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் தனது மகளின் கண்டுபிடிப்புகளை இந்தியா, நைஜீரியா போன்ற நாடுகளின் மாணவர்களுக்கு இலவசமாக அளிப்பது அவரது திட்டமாகும்.

செப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி