/ தினமலர் டிவி
/ பொது
/ விக்கிரவாண்டி அருகே துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பரபரப்பு | Airgun shoot | 3 serious injured | Famil
விக்கிரவாண்டி அருகே துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பரபரப்பு | Airgun shoot | 3 serious injured | Famil
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தென்னரசு - லாவண்யா தம்பதி. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று வழக்கம்போல் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த தென்னரசு, மனைவி லாவண்யாவை தான் வைத்திருந்த ஏர்கன்னால் சுட்டுள்ளார். அவரை தடுக்க முயன்ற தாய் பச்சையம்மாள், சித்தப்பா மகன் கார்த்திக்கையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தலையில் படுகாயமடைந்த கார்த்தி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜூலை 12, 2025