உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏர்போர்ட் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு airport moorthy arrest| vck| thirumavalavan

ஏர்போர்ட் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு airport moorthy arrest| vck| thirumavalavan

புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, விசிக தலைவர் திருமாவளவன் பற்றி விமர்சித்து வந்தார். நேற்று மயிலாப்பூர் டிஜிபி அலுவலகம் முன்பு மூர்த்தி நின்று கொண்டிருந்தபோது, விசிகவினர் சுற்றிவளைத்து தாக்கினர். செருப்பால் அடித்து சட்டையை கிழித்தனர். பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் விசிகவினரை திருப்பி தாக்கியிருக்கிறார். அவர்கள் ஓடிவிட்டனர். அதன்பின் பேட்டி அளித்த மூர்த்தி, திருமாவளவனை அரசியல் ரீதியாக விமர்சிக்கிறோம். அதனால், என்னை கொலை செய்ய முயற்சி நடக்கிறது. போலீசில் புகார் அளித்தால், என்னை கவனமாக இருக்க சொல்கிறார்கள் என கூறியிருந்தார். இச்சூழலில், ஏர்போர்ட் மூர்த்தி, பாக்கெட் கத்தியால் விசிகவினரை தாக்கியதாக அக்கட்சி பிரமுகர் திலீபன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மூர்த்தி மீது ஆபாசமாக பேசுதல், தாக்கியது; கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் மெரினா போலீசார் வழக்கு செய்த போலீசார் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மூர்த்தி அளித்த புகார் அடிப்படையில் விசிகவினர் 5 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

செப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை