உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அஜித் பவார் விமானம் வெடிக்கும் முன்பே பகீர் | Ajit Pawar plane crash | NCP | baramati flight crash

அஜித் பவார் விமானம் வெடிக்கும் முன்பே பகீர் | Ajit Pawar plane crash | NCP | baramati flight crash

ேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவார் விமான விபத்தில் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது. அவருக்கு வயது 66. மகாராஷ்டிராவை ஆட்சி செய்யும் என்டிஏ கூட்டணியின் முக்கிய தலைவர் அஜித் பவார். துணை முதல்வராகவும் பதவி வகித்து வந்தார். நேற்று மும்பையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அஜித் பவார், தனது சொந்த ஊரான பாராமதிக்கு இன்று காலை சிறிய ரக தனி விமானத்தில் புறப்பட்டார். பாராமதி ஏர்போர்ட்டில் தரையிறங்க முயன்ற போது விமானம் விபத்துக்குள்ளானது. தரையில் மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில், தீயில் கருகி அஜித் பவார், பைலட்கள் உட்பட விமானத்தில் இருந்த 5 பேரும் மரணம் அடைந்தனர். நாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவரான அஜித் பவார் மரணம் தேசிய அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #AjitPawarPlaneCrash #NCP #BaramatiFlightCrash #AviationNews #IndiaNews #BreakingNews #AirSafety #PlaneCrash #PoliticalUpdates #MaharashtraPolitics #EmergencyLanding #FlightIncident #TragicNews #NCPLeadership #Baramati #AviationAccident #SocialMediaNews #CurrentEvents #PublicReaction #SafetyFirst

ஜன 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை