நெதர்லாந்தில் நடந்த கார் ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் Ajith kumar | Car Race | Netherland | GT4 |
நடிகர் அஜித்குமார் சமீப காலமாக சர்வதேச கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார் துபாயில் நடந்த கார் ரேஸில் அவரது அஜித்குமார் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்து சாதித்தது. அதன்பிறகு, போர்ச்சுக்கல் மற்றும் இத்தாலியில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு அசத்தினார். தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய தொடரில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ளார். இதன் 2வது சுற்றில் போர்ஷியா அணியில் அஜித் கலந்து கொண்டார். அவர் ஓட்டி சென்ற காரின் டயர் வெடித்ததில் விபத்து ஏற்பட்டது. நல் வாய்ப்பாக அஜித்துக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. டயர் மாற்றப்பட்டு மீண்டும் நடிகர் அஜித் பந்தயத்தில் பங்கேற்றார். கடந்த ஜனவரியில் துபாயில் நடந்த கார் பந்தயத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது அஜித் விபத்தில் சிக்கினார். பிப்ரவரியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் நடந்த கார் பந்தயம், ஏப்ரலில் ஜிடி4 யூரோபியன் கார் ரேஸ் பயிற்சின்போதும் அஜித் விபத்தில் சிக்கினார். காயங்கள் ஏற்படவில்லை.