அஜிதா ஐசியுவுக்கு மாற்றம்; என்ன நடந்தது? பரபரப்பு தகவல் Ajitha agnel tvk thoothukudi tvk vijay
சட்டசபை தேர்தலுக்கு வேகமாக தயாராகி வரும் விஜய், சமீபத்தில் தவெக மாவட்ட செயலாளர்களை நியமித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் தவெகவுக்காக தீவிரமாக வேலை பார்த்தவர் அஜிதா ஆக்னல். தூத்துக்குடியைச் சேர்ந்த அஜிதா ஆசிரியை வேலையை விட்டு விட்டு கட்சிப்பணி செய்து வந்தார். தனக்கு தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைக்கும் என நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் மாவட்டச் செயலாளராக சாமுவேல்ராஜ் என்பவரை தவெக தலைமை அறிவித்தது. இதனால் மனமுடைந்த அஜிதா தனது ஆதரவாளர்களுடன் சென்னை பனையூருக்கு வந்தார். விஜய் கார் வரும் நேரம் பார்த்து காத்திருந்தார். விஜய் கார் வந்ததும் காரை மறித்து போராட்டம் நடத்தினார். ஆனால், விஜய் காரை நிறுத்தாமல் போனார். பவுன்சர்கள் அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்களை அப்புறப்படுத்தினர். அன்று நாள் முழுவதும் விஜய் வீட்டின் முன் அஜிதாவும் ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தினர். சமரசம் செய்ய வந்த நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விஜயை சந்திக்காமல் போக மாட்டேன் என உறுதியாக சொன்ன அஜிதா ஆக்னல், தூத்துக்குடிக்கு சோகமாக திரும்பினார். இதனிடையே, அஜிதா திமுகவின் கைக்கூலி என தவெகவினர் சமூக வலைத்தளங்களில் திட்டியும், கேலி செய்தும் பதிவிட்டதால் மனவேதனை அடைந்தார். தூத்துக்குடி புல்தோட்டம் பகுதியில் உள்ள வீட்டுக்கு ஆதரவாளர்களை கிறிஸ்துமஸ் தினத்தன்று கூப்பிட்டு ஆலோசனை நடத்தினார். தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் தவெகவினர் பற்றி மன வேதனையுடன் பேசியிருக்கிறார். ஆதரவாளர்கள் போன பிறகு தனிமையில் இருந்த அஜிதா ஆக்னல், திடீரென அளவுக்கதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மயங்கிய அவரை குடும்பத்தினர் மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், இன்று அவரது உடல்நிலை திடீரென மோசமானது. உடனடியாக, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் குடும்பத்தினரும் அஜிதாவின் ஆதரவாளர்களும் சோகத்தில் உள்ளனர். அஜிதாவை பார்க்க ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்களுடன் பேசிய பிறகு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால் அவரது உடல்நிலை பின்னடைவைச் சந்தித்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. தூத்துக்குடி தவெக வட்டாரத்திலும் அஜிதா உடல்நிலை பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. #AjithaAgnel #TVK #Thoothukudi #TVKVijay #VijayProtest #VijayCar #PrivateHospital #ICU #TamilNadu #VijayFans #ProtestNews #HealthUpdate #VijaySupport #BreakingNews #TamilCinema #VijayUpdates